மொரப்பூர் மருதம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி
அரூர் தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் மருதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். 10ம் வகுப்பு மாணவர் இளந்தீபன், 500-க்கு, 496 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார்.மாணவி திவ்யா, 495 மதிப்பெண் பெற்று, 2-ம் இடமும், மாணவர் கோகுல், 494 மதிப்பெண் பெற்று, 3-ம் இடமும் பெற்றுள்ளார். 12ம் வகுப்பு தேர்வில் மாணவர் கவுதம், 600க்கு, 589 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவி பூவிழி, 586 மதிப்பெண் பெற்று, 2ம் இடமும், மாணவி சுபிதா, 584 மதிப்பெண் பெற்று, 3-ம் இடமும், மாணவர் நவீன்குமார், 581 மதிப்பெண் பெற்று, 4-ம் இடமும் பெற்றுள்ளார். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதத்தில், 5 பேர், அறிவியலில், 10 பேர், சமூக அறிவியலில், 21 பேரும், 100-க்கு, 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவ, மாணவியர், 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவியரையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும், மருதம் பள்ளி தலைவர் தவமணி, தாளாளர் திலகரசன், செயலாளர் அரவிந்த், பொருளாளர் சக்திவேல், பள்ளி முதல்வர் ராமு ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர்.