உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தொடர் மின்வெட்டை கண்டித்து மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

தொடர் மின்வெட்டை கண்டித்து மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

ஒகேனக்கல், தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல், ஊட்டமலை பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வட்டத்திற்கு உட்பட்ட நாட்ரபாளையம், தொட்டமஞ்சு ஆகிய பஞ்சாயத்துக்கு உட்பட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏற்படும் தொடர் மின்வெட்டை கண்டித்து, நேற்று ஒகேனக்கல் பஸ் ஸ்டேண்ட் அருகே மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பென்னாகரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், 100க்கும், மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.'பெண்களுக்கு ரூ.1,000 வழங்குவதை ஆண்களிடம் அரசு பெற்றுக்கொள்கிறது'கிருஷ்ணகிரி, அக். 30கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டியில், கிழக்கு ஒன்றிய, அ.தி.மு.க., சார்பில், மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்த, பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசுகையில், ''பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், தங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று, தேர்தல் வாக்குறுதியில், தி.மு.க., நிறைவேற்றாத திட்டங்கள் குறித்து, மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். பெண்களுக்கு, தி.மு.க., அரசு, 1,000 ரூபாய் வழங்கி, அதை ஆண்கள் மூலம் மீண்டும் பெற்றுக் கொள்கிறது,'' என்றார்.கூட்டத்தில், கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன் வரவேற்றார். அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆஜி முன்னிலை வகித்தார். ஐ.டி., பிரிவு சேலம் மண்டல துணை செயலாளர் நிர்மல் ஆனந்த், ஒன்றிய செயலார்கள் பையூர் ரவி, சூர்யா, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ