உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி

விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி

கிருஷ்ணகிரி: தமிழ்நாடு, வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தோட்-டக்கலைக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையம் பையூரில், ஏ.பி.கே., 2, பால் காளான் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடந்தது. பயிற்சியை முதன்மை அலுவலர் மற்றும் பேராசிரியர் மற்றும் தலைவர் அனீசா ராணி துவக்கி வைத்து பேசினார். இதில், பால் காளான் உற்பத்தி தொழில்நுட்ப உரை மற்றும் செயல்விளக்கத்தை உதவி பேராசிரியர் சுந்தரமூர்த்தி விரிவாக எடுத்துரைத்தார். மேலும், காளானை தாக்கக்கூடிய பூச்சி மற்றும் நோய் தாக்குதல் பற்றிய தகவல்களை உதவி பேராசிரியர்கள் கோவிந்தன், சசி-குமார், செந்தில்குமார் மற்றும் காளான் வளர்ப்புக்கு உகந்த கால-நிலை பற்றி, இணை பேராசிரியர் கிருஷ்ணவேணி விரிவாக எடுத்துரைத்தனர். பயிற்சியில், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த காளான் வளர்ப்பில் ஆர்வமுள்ள, 65 முன்னோடி விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகள் பங்கேற்றனர். முடிவில், விவசாயிக-ளுக்கு சான்றிதழ், காளான் வளர்ப்பு பற்றிய தொழில்நுட்ப கையேடுகள் மற்றும் காளான் வளர்ப்பு மாதிரிகள் வழங்கப்பட்-டன. பேராசிரியர் சுதமதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ