உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / முத்துமாரியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா

முத்துமாரியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அடுத்த சின்னபனமுட்லு கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா கடந்த செப்., மாதம் நடந்தது. இதையடுத்து, 48 நாட்கள் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று நடந்தது.இதில், சின்னபனமுட்லு மற்றும் பல்வேறு கிராமங்களில் இருந்து கிராமிய கலைநிகழ்ச்சியுடன், பெண்கள் மாவிளக்கை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்து அம்மனுக்கு படைத்து, வேண்டுதல் நிறைவேற்றினர். தொடர்ந்து, அம்ம-னுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். சிறப்பு அலங்கா-ரத்தில் அம்மன் அருள் பாலித்தார். வாண வேடிக்கையுடன் தீபா-ராதனை நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்-பாடுகளை சின்னபனமுட்லு கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !