உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தேன்கனிக்கோட்டை நகரில் குறுகலான சாலை சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் அவதி

தேன்கனிக்கோட்டை நகரில் குறுகலான சாலை சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் அவதி

தேன்கனிக்கோட்டை நகரில் குறுகலான சாலை சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் அவதிஓசூர், டிச. 18-கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் இருந்து அஞ்செட்டி செல்லும் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் செல்லும் சுற்றுலா பயணிகள், இச்சாலையின் இருபுறமும் உள்ள வனப்பகுதி அழகை ரசிப்பதற்காக இச்சாலை வழியாக செல்கின்றனர். அதேபோல், அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை பகுதியில் இருந்து ஓசூர் செல்லும் வாகன ஓட்டிகளும், இச்சாலை வழியாக தான் பயணிக்கின்றனர். ஆனால், தேன்கனிக்கோட்டை நகருக்குள் இச்சாலை ஒரு கி.மீ., துாரத்திற்கு மேல் குறுகலாக உள்ளதால், காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.கனரக வாகனங்கள் சாலையில் சென்றால், எதிர்புறம் வரும் வாகனம் காத்திருந்து தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால், ஒகேனக்கல் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் இதர வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகின்றனர். தேன்கனிக்கோட்டை நகருக்குள் உள்ள சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, சாலையை விரிவாக்கம் செய்ய, மாநில நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கையை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை