உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இயற்கை உரம் தயாரிப்பு முறை: மாணவியர் விளக்கம்

இயற்கை உரம் தயாரிப்பு முறை: மாணவியர் விளக்கம்

கிருஷ்ணகிரி:மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலை-யத்தில் பயிலும் பட்டுப்புழுவியல் துறை மாணவியர், பணி அனுபவத்திற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். அதன்படி, கிருஷ்ணகிரி அடுத்த கனக-முட்லு கிராமத்தில், விவசாயிகளுக்கு இயற்கை உரம் மற்றும் தயாரிப்பு முறைகள் குறித்து பட்டுப்புழுவியல் துறை மாணவியர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.நிகழ்ச்சியில், மல்பெரி வளர்ப்பு நிலங்களில் இயற்கை உரங்-களின் பயன்பாடுகள் மற்றும் அவற்றின் பரிந்துரைக்கப்பட்ட அளவு ஆகியவை பற்றி விளக்கினர். மேலும், ஜீவாமிர்தம் தயா-ரிப்பு முறைகள் பற்றியும், அவற்றை சரியான அளவில் கலப்பது, தெளிக்கும் முறை, எப்போது மற்றும் எத்தனை முறை போன்ற கேள்விகளுக்கு மாணவியர் விரிவாக விளக்கினர். இதில் விவசா-யிகள் தங்களின் சந்தேகங்களை கேட்டறிந்தனர். மாணவியர், நர்-மதா, நிஷாந்தினி, பவித்ரா, சிவ ரூபினி, சிவசந்தியா, ஸ்ரீநிதி, வீணா வில்வம், வினிஷா, விஷ்ணுபிரியா ஆகியோர் செயல்-முறை விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை