உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மோட்டார் பொருத்தப்பட்ட 3 சக்கர சைக்கிள் வேண்டும்: மாற்றுத்திறனாளி மாணவர்

மோட்டார் பொருத்தப்பட்ட 3 சக்கர சைக்கிள் வேண்டும்: மாற்றுத்திறனாளி மாணவர்

பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரியில் ஓராண்டுக்கு மேல் மூன்று சக்கர சைக்கிள் கேட்டும் இதுவரை கிடைக்கவில்லை என மாற்று திறனாளி மாணவர் உமர் வேதனை தெரிவித்தார். தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்த பொ.துரிஞ்சிப்பட்டி வடசந்தையூரை சேர்ந்தவர் இனாயத் இவரது மகன் உமர், 15. கை, கால்கள் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி மாணவர். இவர் துரிஞ்சிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 10 வகுப்பு தேர்வு எழுதி, 397 மதிப்பெண் பெற்றார். மாணவன் உமர், அவரது தாய் ஊர்மிளா ஆகியோர் கூறியதாவது:உமர் மாற்றுத்திறனாளி என்பதால், தினமும் தந்தை இனாயத் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று, பள்ளியில் விட்டு விட்டு மீண்டும் மாலை அழைத்து வருவது வழக்கம். ஓராண்டுக்கு மேலாக, மூன்று சக்கர சைக்கிள் கேட்டு பல முறை அரசு அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் அரசு நடவடிக்கை இல்லை. வாகனம் வழங்கினால் தனியாக பள்ளிக்கு உமர் சென்று விடுவார். ஆனால் இதுவரை வழங்கவில்லை. கைகள் குறைபாடு என்பதால் சைக்கிள் ஓட்ட முடியாது என்கின்றனர். மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர சைக்கிள் வழங்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை