உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புதன்கிழமை கொலைகளில் 4 மாதமாக துப்பு கிடைக்கல

புதன்கிழமை கொலைகளில் 4 மாதமாக துப்பு கிடைக்கல

ஓசூர், ஓசூர், சூளகிரி அருகே அடுத்தடுத்த புதன் கிழமைகளில், 3 முதியவர்கள் கொலை செய்யப்பட்டனர். கடந்த, 4 மாதமாக இக்கொலைகளில் துப்பு கிடைக்காமல் போலீசாரின் விசாரணையில், பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ஒன்னல்வாடியில் கடந்த மார்ச், 12ம் தேதி, வீட்டில் தனியாக இருந்த லுார்துசாமி, 70, அவரது கொழுந்தியாள் எலிசபெத், 60, ஆகியோர் வெட்டி கொல்லப்பட்டனர். வீடும் தீ வைத்து எரிக்கப்பட்டது. சூளகிரி அருகே, 19ம் தேதி அட்டகுறுக்கியை சேர்ந்த நாகம்மா, 65, என்பவர் குத்தி கொல்லப்பட்டு வீட்டுடன் எரிக்கப் பட்டார். அடுத்தடுத்த புதன்கிழமைகளில் இச்சம்பங்கள் நடந்ததால், 'புதன் கிழமை கொலைகள்' என போலீசார் அழைத்தனர். இச்சம்பவங்களில், நகை, பணம் திருட்டு போகவில்லை என, போலீசாரும், கொள்ளை போனதாக, அப்பகுதி மக்களும் கூறுகின்றனர். சம்பவம் நடந்த இடங்களில், 'சிசிடிவி' கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தும், எந்த துப்பும் கிடைக்கவில்லை. ஈரோடு மாவட்டம், சிவகிரி மற்றும் திருப்பூர் மாவட்டம், அவினாசியில் நடந்த இரட்டை கொலைகளுக்கும், இச்சம்பவத்திற்கும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில், தனிப்படை போலீசார் அங்கு சென்று விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை.இந்நிலையில், ஓசூரை சேர்ந்த இருவர், கொலை நடந்த நாட்களில் மாயமாகினர். அவர்கள் மீதான சந்தேகத்தால், ஒரு மாதத்திற்கும் மேலாக இருவரையும் போலீசார் பின்தொடர்ந்து கண்காணித்தும், இருவருக்கும் கொலையில் தொடர்பு இல்லை என தெரிந்துள்ளது. இக்கொலை சம்பவங்கள் விசாரணையில், எந்த துப்பும், கிடைக்காமல் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதால், போலீசார் திணறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !