உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாவட்டத்தில் சராசரியை விட வடகிழக்கு பருவமழை அதிகம்

மாவட்டத்தில் சராசரியை விட வடகிழக்கு பருவமழை அதிகம்

சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், இம்மிடிநாயக்கனப்-பள்ளியில் கிராம சபை கூட்டம், மாவட்ட கலெக்டர் தினேஷ்-குமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள், 7 கோரிக்கைகளை தெரிவித்தனர். அதில் முதன்மையான, 3 பணிக-ளுக்கு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. முன்-னதாக, சென்னை முகாம் அலுவலகத்திலிருந்து, காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், ''தற்போது மழைக்காலம் என்பதால், வீட்டை சுற்றி சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். இல்லா விட்டால் டெங்கு ஏற்படும் நிலை உரு-வாகும். மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை சராசரியை விட அதிகமாக பதிவாகியுள்ளது. தாழ்-வான இடங்களில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்-பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாடுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து, சூளகிரி அருகே ஒமதேப்பள்ளி ஏரிக்கு சென்ற மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், சாலையில் உபரி நீர் செல்-வதால், அப்பகுதியில், கல்வெட்டு கட்ட அதிகாரிகளுக்கு உத்தர-விட்டார். அட்டகுறுக்கி தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்-கியிருந்த நிலையில், வரும் காலங்களில் தேங்காமல் இருக்க நட-வடிக்கை எடுக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.* ஓசூர் ஒன்றியம், அச்செட்டிப்பள்ளி கிராமத்தில், கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் தலைமை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ