உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்ட முகாம்

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்ட முகாம்

ஓசூர், ஓசூர் அருகே, நல்லுார் கிராமத்தில், ஊட்டச்சத்து வேளாண் இயக்க திட்ட சிறப்பு முகாம் நடந்தது. ஓசூர், வேளாண் உதவி இயக்குனர் புவனேஸ்வரி தலைமை வகித்து, வேளாண் துறை மானிய திட்டங்கள், துவரை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும், எண்ணெய் இயக்க திட்டத்தில், நிலக்கடலை விளக்க பண்ணை செயல்விளக்க திடல் அமைக்க, விவசாயிகளுக்கு நிலக்கடலை விதை தொகுப்பு மானியத்தில் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.இத்திட்டத்தில் பயனடைய, விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலரை அணுகலாம் ‍என கேட்டுக் கொண்டார். ஓசூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் சிவசங்கரி, தோட்டக்கலைத்துறை மானிய திட்டங்கள் பற்றி விளக்கமளித்தார். முகாமில், மரத் துவரை, அவரை, காராமணி போன்ற பயிறு வகை தொகுப்பு, பப்பாளி, எலுமிச்சை, கொய்யா ஆகிய பழச்செடி நாற்றுகள் தொகுப்பு, தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, கொத்தவரை, கீரை போன்ற காய்கறி விதை தொகுப்புகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ