தறிகெட்டு ஓடிய ஆம்னி பஸ் கார், டூவீலர் மீது மோதி விபத்து
ஓசூர், ஓசூர் அடுத்த அட்டகுறிக்கி அருகில், பெங்களூருவில் இருந்து சென்னையை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில், ஆம்னி பஸ் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்றது. அட்டக்குறுக்கி அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலை நடுவில் உள்ள தடுப்பை உடைத்து கொண்டு எதிர் திசையில் பெங்களூரை நோக்கி சென்ற கார், டூவீலர்களில் மோதி அருகிலிருந்த கடைகளின் கட்டடத்தின் மீதும் மோதி நின்றது.இதில் கார், பஸ்களின் முன்பகுதியில் லேசான சேதமும், இரு டூவீலர்கள் முற்றிலும் சேதமடைந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நள்ளிரவு நேரம் என்பதால் துாக்கத்தில் பஸ் டிரைவரால் விபத்து ஏற்பட்டது தெரிந்தது.சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.