மேலும் செய்திகள்
காளியம்மன் கோவில் பல்லக்கு ஊர்வலம்
21-May-2025
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பாப்பாரப்பட்டி அருகே பெரியபுளியம்பட்டி கிராமத்தில் கடந்த, 19 முதல் பட்டாளம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் சின்னபுளியம்பட்டியிலிருந்து, மாரியம்மன் கரகம் அலங்கரிக்கப்பட்டு பம்பை, தாரை, தப்பட்டை, வாண வேடிக்கையுடன் மாவிளக்கு ஊர்வலம் நடந்தது.இதில், பட்டாளம்மன் சுவாமியை டிராக்டரில் வைத்து அலங்கரித்து ஊர்வலமாக வந்தபோது, சாலையின் குறுக்கே சென்ற மின்ஒயர் பட்டதில், சுவாமி அலங்கார குடை தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. அப்போது தீயை அணைக்க முயற்சித்த தர்மபுரி மாவட்டம், இருமத்துார் அருகே உள்ள வனத்துார் கிராமத்தை சேர்ந்த சொக்கலிங்கம், 37, என்பவர் மின்சாரம் தாக்கியதில் துாக்கி வீசப்பட்டார். அவரை மீட்டு, போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த நிலையில், பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
21-May-2025