உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பகுதி நேர ரேஷன் கடை திறப்பு

பகுதி நேர ரேஷன் கடை திறப்பு

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் ஒன்றியம் பையூர் பஞ்., கந்தலம்பட்டி ஊத்துப்பள்ளம் பொதுமக்கள், நீண்ட நாட்களாக புதிய ரேஷன் கடை கேட்டு, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ரவியிடம் கோரிக்கை வைத்தனர். அதன்படி, கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சப்பானிப்பட்டியிலுள்ள முழுநேர ரேஷன் கடையில் இருந்து, 260 ரேஷன் அட்டைகளை பிரித்து, கந்தலம்பட்டி கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடையை அமைத்தார். இதை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். இதில், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் பையூர் ரவி, நகர செயலாளர் விமல், முன்னாள் மாவட்ட பஞ்., குழு உறுப்பினர் சங்கீதா கேசவன், மாவட்ட விவசாய அணி செயலாளர் மோகன், ஒன்றிய துணை செயலாளர் விக்ரம்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !