உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தனியார் பஸ் டயர் வெடித்து 20க்கும் மேற்பட்டோர் காயம்

தனியார் பஸ் டயர் வெடித்து 20க்கும் மேற்பட்டோர் காயம்

கிருஷ்ணகிரி, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஓசூருக்கு தனியார் பஸ் நேற்று காலை புறப்பட்டது. டிரைவர் மணி ஓட்டினார். 25க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். ஓசூரை அடுத்த தர்கா பஸ் ஸ்டாப் அருகே, 12:00 மணியளவில் வந்தது. அப்போது முன்பக்க டயர் வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோர தடுப்பு சுவரை கடந்து, தொழிற்சாலை காம்பவுண்ட் மற்றும் கடையை உடைத்து மோதி நின்றது. இதில் டிரைவர், பயணிகள் மற்றும் அப்பகுதியில் நின்றவர்கள் என, 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு குழுவினர் மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி