மேலும் செய்திகள்
எருது விடும் விழா 10 பேர் மீது வழக்கு
22-Apr-2025
போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, அத்திகானுார் கிராமத்தில், 72வது ஆண்டு எருது விடும் திருவிழா நேற்று நடந்தது.இதில் கிருஷ்ணகிரி, வேலுார், திருப்பத்துார் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், அதேபோல் ஆந்திர மாநிலத்திலிருந்தும், 400 எருதுகள் பங்கு பெற்றன. முதல் பரிசாக, 2.25 லட்சம் ரூபாய், 2வது பரிசாக 1.75 லட்சம் ரூபாய், 3வது பரிசாக, 1.40 லட்சம் ரூபாய் என, 60 பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. குறிப்பிட்ட துாரத்தை குறைந்த நேரத்தில் கடந்த எருதுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. இதில், 2,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள் என, எருது விடும் திருவிழாவை காண குவிந்தனர். ஊத்தங்கரை டி.எஸ்.பி., சீனிவாசன் தலைமையில், 50 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
22-Apr-2025