உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நாட்டாண்மை கொட்டாயில் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு

நாட்டாண்மை கொட்டாயில் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு

ஊத்தங்கரை:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பேரூராட்சி, 3வது வார்டு நாட்டாண்மை கொட்டாய் கிராமத்தில், பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலாளரும், பர்கூர் எம்.எல்.ஏ.,வுமான மதியழகன் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து, முதல் விற்பனையை தொடக்கி வைத்தார். இதில், பேரூராட்சி தலைவர் அமானுல்லா, வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபால், கூட்டுறவு சார் பதிவாளர் ஸ்ரீதர், தொடக்க வேளாண் கூட்டுறவு செயலாளர் உஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். வார்டு கவுன்சிலர் மோகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !