பொங்கல் பண்டிகை விழா கோலமிட்டு மகிழ்ந்த மக்கள்
தர்மபுரி: தர்மபுரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நள்ளிரவு முதல் அதிகாலை வரை பெண்கள் கோலமிட்டு பரவசமடைந்தனர்.தமிழகத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தர்மபுரியில் வீடுகளின் முன் பெண்கள் வண்ணப் பொடிகள் கொண்டு கோலிமிட்டனர். புள்ளி கோலம், ரங்கோலி கோலமிட்டு அசத்தினர். சாரல் மழையையும் பொருட்படுத்தாமல், பொங்கல் வீட்டு வாசல் முன், கோலமிட்டு மகிழ்ந்தனர்.