உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மழையால் ஓசூர் மக்கள் மகிழ்ச்சி

மழையால் ஓசூர் மக்கள் மகிழ்ச்சி

ஓசூர், ஓசூர் சுற்றுப்புற பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை குளிர்ந்த காற்று வீசி, மழை வருவது போல் காலநிலை இருந்தது. ஆனால், மழை பெய்யாமல் தாமதமாகி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு மேல், ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், 16 மி.மீ., அளவிற்கு மிதமான மழை பெய்தது.அதேபோல், தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், 5 மி.மீ., அளவிற்கு சாரல் மழை பெய்தது. கெலவரப்பள்ளி அணை பகுதியில், ஒரு மி.மீ., அளவிற்கு மழை பதிவாகி இருந்தது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்வதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி