அடிப்படை வசதி கேட்டு மக்கள் மனு
ஓசூர், ஓசூர் மாநகராட்சி, 5வது வார்டு சின்ன எலசகிரி பாலாஜி நகரில், சாலை, தெருவிளக்கு, குடிநீர் மற்றும் சாக்கடை கால்வாய் வசதி முறையாக இல்லை. மாநகராட்சிக்கு வரி செலுத்தியும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இது தொடர்பாக, அப்பகுதி, தி.மு.க., கவுன்சிலர் ரவியிடம் பலமுறை மக்கள் கேட்ட போதும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்பகுதியில் மழைக்காலங்களில் சாலை சேரும், சகதியுமாக மாறி விடுகிறது.அத்துடன், பாம்புகள் அதிகளவில் உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, உரிய நடவடிக்கை எடுத்து, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், 25க்கும் மேற்பட்டோர், ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை வந்தனர். அங்கு சப்-கலெக்டர் இல்லாததால் அவரது நேர்முக உதவியாளர் சண்முகத்திடம் கோரிக்கை மனுவை வழங்கினர். அதேபோல், ஓசூர் மாநகராட்சி அலுவலகத்திலும் மனு வழங்கப்பட்டது.