/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தைப்பூச திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க மனு
தைப்பூச திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க மனு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி இந்து முன்னணி ஒன்றிய தலைவர் சந்தோஷ்குமார், ஹிந்து சமய அறநிலையத்துறை கோவில் ஆய்வாளர் மற்றும் பரம்பரை அறங்காவலர் ஆகியோரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி ஆஞ்சநேய சுப்ரமணிய சுவாமி கோவிலில், வரும், 11ல் தைப்பூச திருவிழா நடக்க உள்ளது. இதில், கோவில் வளாகத்தில் இன்னிசை கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதில் சினிமா ஆபாச பாடல்கள் மற்றும் தமிழ் கலாசாரத்தை சீரழிக்கும், இரட்டை அர்த்த ஆபாச ஆடல், பாடல்கள் போன்ற சமுதாயத்தை சீரழிக்கும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும். ஹிந்துக்களின் கலாசாரத்தை பேணும் வழியில் ஆன்மிக சொற்பொழிவுகள், பக்தி பாடல்கள், தெருக்கூத்து, பரத நாட்டியம் போன்றவற்றை சான்றோர்களை வைத்து நடத்த வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.