உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பைப் திருடியவர் கைது மற்றொருவருக்கு வலை

பைப் திருடியவர் கைது மற்றொருவருக்கு வலை

சூளகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சிகரலப்பள்ளியை சேர்ந்தவர் பாலாஜி, 55, செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவரது செங்கல் சூளையில் கடந்த, 24ல், 10,000 ரூபாய் மதிப்பிலான இரும்பு பைப்புகள் திருட்டு போனது. இது குறித்து சூளகிரி போலீசில் பாலாஜி புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், பெரமனப்பள்ளி பகுதியை சேர்ந்த இருவர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை, 2:00 மணியளவில், அந்த இருவரும் டூவீலரில் நோட்டமிட்டபடி சென்றனர். அவர்களை போலீசார் பிடித்த போது, ஒருவர் தப்பி விட்டார். சிக்கியவர் பெரமனப்பள்ளி பாபு, 28, என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய சாமனப்பள்ளி முகமது என்பவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !