போலீஸ் ஸ்டேஷன் பணிகள் மாணவர்களுக்கு விளக்கம்
சூளகிரி, சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும், 10ம் வகுப்பு மாணவர்கள் களப்பயணமாக, சூளகிரி ஸ்டேஷனுக்கு நேற்று அழைத்து செல்லப்பட்டனர். அங்கு, இன்ஸ்பெக்டர் சையத் சுல்தான் பாஷா தலைமையிலான போலீசார், ஸ்டேஷனில் நடக்கும் பணிகள் என்ன, போலீசார் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும், எதுபோன்ற வழக்குகள் ஸ்டேஷனுக்கு வரும், அதை எவ்வாறு கையாண்டு வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என, மாணவர்களுக்கு விளக்கினார்.மேலும், மாணவர்கள் போதை பொருட்களுக்கு எதிராக, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிந்தால், போலீசாருக்கு தெரிவிக்கலாம் என, அறிவுறுத்தப்பட்டது.