ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி, தி.மு.க., மேற்கு ஒன்றியம் சார்பில் பையர்நத்தத்தில் உள்ள கலைஞர் திருமண மண்டபத்தில் ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் நடந்தது. இதில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி பார்வையாளர் நரேஷ் குமார் ஆலோசனைகள் வழங்கினார். புதிய வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கும் முகாமில், 18 வயது பூர்த்தி அடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க உரிய பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். கூட்டத்தில், கிளை நிர்வாகிகள் வெங்கடேசன், சங்கர், குறிஞ்சி நகர் வெங்கடேசன், ஓட்டுச்சாவடி முகவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.