உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.2.32 கோடி மதிப்பில் சாலை பணிக்கு பூஜை

ரூ.2.32 கோடி மதிப்பில் சாலை பணிக்கு பூஜை

கிருஷ்ணகிரி, பர்கூர் சட்டசபை தொகுதியில் நபார்டு திட்டத்தில், 1.05 கோடி ரூபாய் மதிப்பில், குட்டூர் ஊராட்சி பட்டலப்பள்ளி கூட்டு ரோடு முதல், ஆம்பள்ளி தார்சாலை மேம்படுத்தப்படுகிறது. 54.79 லட்சம் ரூபாய் மதிப்பில் குட்டூர் ஊராட்சி கூச்சூர் ஆம்பள்ளி சாலை முதல் காரியாமங்கலத்தூர் கவாடி கவுண்டர் வட்டம் தார்ச்சாலை மேம்படுத்தப்படுகிறது.அதே போல, 36.39 லட்சம் ரூபாய் மதிப்பில் குட்டூர் ஊராட்சி சேக்கினாம்பட்டி- பாரதிபுரம் தார்ச்சாலை, 36.39 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒப்பதவாடி ஊராட்சி கிருஷ்ணகிரி -ராணிபேட்டை சாலை முதல் குண்டியல்நத்தம் தார்ச்சாலை மேம்படுத்தப்படுகிறது.மொத்தம், 2.32 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில் கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ