உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நந்திகேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை வழிபாடு

நந்திகேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை வழிபாடு

நந்திகேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை வழிபாடுகிருஷ்ணகிரி, அக். 1-கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பொன்னன் நகர் தமட்டகுட்டையில் அமைந்துள்ள நந்திகேஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாடு நேற்று மாலை, 6:00 மணிக்கு நடந்தது. இதையொட்டி நடந்த பிரதோஷ பூஜையில், பால், தயிர், தேன், இளநீர், எள், எண்ணெய், விபூதி, குங்குமம், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களை கொண்டு சிவலிங்கம் மற்றும் நந்தி சிலைக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. இதில், சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை