உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தனியார் ஊழியர் மாயம்

தனியார் ஊழியர் மாயம்

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அந்திவாடி விகாஸ் நகரை சேர்ந்தவர் நாராயணகவுடா மகன் பானுகிரண், 36. தனியார் நிறு-வனத்தில் பணியாற்றி வருகிறார்; கடந்த மாதம், 6ம் தேதி நண்-பகல், 12:00 மணிக்கு, ஓசூர் பேகேப்பள்ளியில் உள்ள தனது அண்ணன் பாபு வீட்டிலிருந்து, தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்றவர் மாயமானார். அவரது மனைவி யஸ்வினி, 34, புகார்-படி, சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர். அதிக கடன் சுமை காரணமாக, பானுகிரண் மாயமாகி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ