உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஈஷா கிராமோத்சவ விளையாட்டு போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு

ஈஷா கிராமோத்சவ விளையாட்டு போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு

ஓசூர், நவ. 20-ஓசூர் அருகே மதகொண்டப்பள்ளியில், கோவை ஈஷா யோகா மையம் சார்பில், மாவட்ட அளவிலான கிராமோத்சவ வாலிபால் போட்டிகள் நடந்தன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம், 17 அணிகள் பங்கேற்றன. ஓசூர் ஈஷா ஒருங்கிணைப்பாளர்கள் நசீர் அகமது, ரவி ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர். இறுதி போட்டியை, ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி துவக்கி வைத்தார். போட்டியில், ஓசூர் பேகேப்பள்ளி அணி முதலிடம், தேன்கனிக்கோட்டை அணி, 2ம் இடம், சூளகிரி அணி, 3ம் இடம், ஓசூர் அணி, 4ம் இடம் பெற்றன.முதலிடம் பெற்ற அணிக்கு, 9,000 ரூபா்ய், பரிசுக்கோப்பை, 2ம் இடம் பெற்ற அணிக்கு, 6,000 ரூபாய், பரிசுக்கோப்பை, மூன்றாமிடம் பெற்ற அணிக்கு, 3,000 ரூபாய், 4ம் இடம் பெற்ற அணிக்கு, 2,000 ரூபாய் பரிசாக வழங்கப்பட்டன. முதலிடம் பெற்ற பேகேப்பள்ளி அணி, கோவையில் வரும் டிச., மாதம் நடக்கும் தென்மாநில அளவிலான வாலிபால் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !