ரூ.42 லட்சத்தில் திட்டப்பணி
போச்சம்பள்ளி: பர்கூர் தொகுதிக்கு உட்பட்ட, பெருகோபனபள்ளி கிராமத்தில், ராஜ்யசபா, அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை மேம்பாட்டு நிதியில் இருந்து, 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சமுதாய கூடம் கட்ட நேற்று பூமி பூஜை நடந்தது. அதேபோல் குட்டூர் பஞ்., முருகன் கோவில் அருகில், 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சமுதாய கூடமும், ஜிஞ்சம்பட்டி, பலராமன் வட்டத்தில், 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பல்நோக்கு கட்டடம் கட்டவும், பூமி பூஜை நடந்தது. அ.தி.மு.க., ராஜ்யசபா உறுப்பினர் தம்பிதுரை, அ.தி.மு.க., முன்னாள் பர்கூர் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் ஜெயபால், ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர்.