உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கோவிலில் திருடியவருக்கு காப்பு

கோவிலில் திருடியவருக்கு காப்பு

பென்னாகரம்: பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் சக்தி மாரி-யம்மன் கோவில் உள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற வாலிபர் உண்டியலை கடப்பாரையால் உடைத்துள்ளார். பின், தப்ப முயன்ற வாலிபரை மக்கள் பிடித்தனர். விசாரணையில் மாரியம்மன் கழுத்தில் இருந்து, ஒன்‍றேகால் பவுன் தாலி, 17,000 ரூபாய் திருடியது தெரியவந்தது. அந்த வாலிபரை பென்னாகரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த வாலிபர் பென்னாகரம் செக்குமேடு பகுதியை சேர்ந்த வெங்கட்ராமய்யா மகன் பிரதீப், 22 என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை