உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கோட்டையூரில் வீட்டுமனைகளை கையகப்படுத்தும் போராட்டம் ஓசூர், அக். 1-

கோட்டையூரில் வீட்டுமனைகளை கையகப்படுத்தும் போராட்டம் ஓசூர், அக். 1-

கோட்டையூரில் வீட்டுமனைகளைகையகப்படுத்தும் போராட்டம்ஓசூர், அக். 1-கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே கோட்டையூர் கிராமத்தில், 1985ம் ஆண்டு, 33 ஏழை குடும்பங்களுக்கு வீட்டுமனை வழங்க, 1.76 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தியது. 40 ஆண்டுகள் ஆன போதும், அந்த நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து பயனாளிகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்கவில்லை.இது தொடர்பாக, மாவட்ட கலெக்டர், தனி தாசில்தாரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மா.கம்யூ., கட்சி சார்பில், கோட்டையூரிலுள்ள நிலத்தில் வீட்டுமனைகளை கையகப்படுத்தும் போராட்டம் நேற்று காலை நடந்தது.மா.கம்யூ., மாநில குழு உறுப்பினர் டில்லிபாபு தலைமை வகித்தார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஆனந்தகுமார், பொருளாளர் சிவப்பிரகாஷ், துணை செயலாளர் நாராயணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.மாநில துணைத்தலைவர் ஆனந்தன், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க, மாவட்ட தலைவர் முருகேஷ் உட்பட பலர் பேசினர். பேச்சுவார்த்தை நடத்திய வருவாய்த்துறை அதிகாரிகள், வேறு இடத்தில் பட்டா வழங்குவதாக தெரிவித்தனர். அதே இடத்தில் பட்டா வழங்க வேண்டும் எனக்கூறி, பயனாளிகள் மூலம், அதிகாரிகளிடம் மனு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை