மேலும் செய்திகள்
ஐயப்பன் கோயிலில் தீபாவளி சேவை விழா
13-Oct-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஆஞ்சநேயர் மற்றும் அனுமந்த நாராயண சுவாமி அறக்கட்டளை சார்பில், அன்னை அன்பு இல்லத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு, மளிகைப் பொருட்கள், இனிப்பு, பட்டாசு ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.செட்டிமாரம்பட்டியைச் சேர்ந்த அறக்கட்டளை தலைவர் மாது, செயலாளர் அரசகுமார், பொருளாளர் சேகர் ஆகியோர் தலைமையில், காப்பக நிர்வாகி மல்லிகா ராமனிடம், காப்பகத்திற்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி, இனிப்புகளுடன், பட்டாசு ஆகியவை வழங்கப்பட்டன. இது குறித்து காப்பக நிர்வாகி மற்றும் குழந்தைகள் கூறுகையில், 'தீபாவளி நாளில் இனிப்புடன் பட்டாசு வழங்கியது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அறக்கட்டளைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்' என்றனர்.துணைத் தலைவர் சின்னசாமி, துணை செயலாளர் ருத்ரமணி, துணை பொருளாளர் வேடியப்பன், கவுரவ நிர்வாக உறுப்பினர்கள் திருப்பதி, நந்தகோபால், கிருஷ்ணமூர்த்தி மற்றும் மிட்டள்ளி பஞ்., முன்னாள் தலைவர் சுப்பிரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.
13-Oct-2025