மேலும் செய்திகள்
தி.மு.க,, பொதுக் கூட்டம்
13-May-2025
கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி தி.மு.க., கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றிய, தி.மு.க., சார்பில் தமிழக அரசின் நான்கு ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. தி.மு.க., ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர் அம்முபழனி வரவேற்றார். மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர்கள் சோலிங்கர் சீனிவாசன், ஆனந்தசைனி, தமிழக அரசின் நான்கு ஆண்டு சாதனைகள் குறித்து பேசினர். மாவட்ட அவைத் தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், ஒன்றிய செயலாளர்கள் சுப்பரமணி, மகேந்திரன், மாநில வர்த்தகரணி துணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட ஓட்டுனரணி துணைத் தலைவர் செந்தில்குமார் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
13-May-2025