உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஆனந்துாரை அடுத்த ரெட்டிப்பட்டி பாரதிபுரத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் ரெட்டிப்பட்டியில் இருந்து பாரதிபுரம் செல்ல அரசு நில வரைபடத்தில் குறிப்பிட்டுள்ள புறம்போக்கு நிலத்தை, வழிப்-பாதை அமைத்து சென்று வந்திருந்தனர்.பள்ளி மாணவர்கள் முதல், அனைவருமே இப்பாதையை பயன்ப-டுத்தி வந்தனர். ஆனால், வழிப்பாதை அமைத்திருந்த நிலத்தை ரெட்டிபட்டியை சேர்ந்த சிலர், ஆக்கிரமிப்பு செய்து வழியை மறித்துள்ளனர். இதனால் கிராம மக்கள், தாசில்தார் அலுவலகம், கல்லாவி போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனுக்கள் கொடுத்தனர். ஆனால் இதுவரை அதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கா-ததால், நேற்று ஊர் பொதுமக்கள் அனைவரும், ஊத்தங்கரை தாசில்தார் அலுவலகம் முன்பு, பள்ளி மாணவர்களுடன் இணைந்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்-டனர்.தகவலறிந்து வந்த ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் மற்றும் துணை தாசில்தார் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதால் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ