மேலும் செய்திகள்
சமுதாய கூடம் கட்ட பூமி பூஜை
19-Sep-2025
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், நாகோஜனஹள்ளி பேரூராட்சியில் தமி-ழக அரசின் குடிசைகள் அற்ற கோபுரமாய் உயர்த்தும் அரசின் திட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துறையின் மூலம், 43 நபர்களுக்கு இல-வச வீடு வழங்கும் திட்டத்திற்கும், அதேபோல் நபார்டு திட்-டத்தில், வேலம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 3 வகுப்பறை கட்டடம் கட்டவும், வேலம்பட்டி பஸ் ஸ்டாண்டில், 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிழற்கூடம் கட்டவும் நேற்று பூஜை நடந்தது. பர்கூர், தி.மு.க., -- எம்.எல்.ஏ., மதியழகன், ஒன்றிய செயலாளர் மகேந்திரன், நாகோஜனஹள்ளி பேருராட்சி தலைவர் தம்பிதுரை மற்றும் தி.மு.க.,வை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
19-Sep-2025