உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / முஸ்லிம் மயானத்திற்கு பேவர் பிளாக் சாலை அமைக்க பூஜை

முஸ்லிம் மயானத்திற்கு பேவர் பிளாக் சாலை அமைக்க பூஜை

ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, சாமல்பட்டி முஸ்லிம் மயானத்திற்கு பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.ஊத்தங்கரை சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, முஸ்லிம் மத முறைப்படி துவா செய்து, நேற்று பணிகள் துவக்கி வைக்கப்பட்டன. ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வத்துக்கு, ஜமாத் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு மரியாதை செலுத்தினர். மாவட்ட துணை செயலர் சாகுல்அமீது, ஒன்றிய செயலர்கள் மத்துார் நரேஷ் குமார், ஊத்தங்கரை வேடி, சிறுபான்மை பிரிவு பியாரே ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை