உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனி வழிபாடு

பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனி வழிபாடு

கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புரட்டாசி மாதத்தில் பெருமாளை வணங்கும் பக்தர்கள் விரதமிருப்பது வழக்கம். இந்தாண்டு புரட்டாசி மாதம் கடந்த, 1ல் துவங்கியது. நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, மாவட்டத்திலுள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது.அதன்படி, கிருஷ்ணகிரி அடுத்த கணவாய்ப்பட்டியிலுள்ள வெங்கட்டரமண சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. கோவிலுக்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். அதேபோல், வேலம்பட்டி அருகே பெரியமலை கோவில், 50 அடி உயர மலை உச்சியிலுள்ள ஐகுந்தம்கொத்தப்பள்ளி சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை மேலுள்ள சீனிவாச பெருமாளை வழிபட்டனர். மூலவர் சீனிவாச பெருமாளுக்கும், உற்சவ மூர்த்திக்கும், மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கிருஷ்ணகிரி காட்டு வீரஆஞ்சநேயர் கோவில், வெங்கடரமண சாமி, கிருஷ்ணகிரி பொன்மலை சீனிவாச பெருமாள், பாலேக்குளி அனுமந்தராய சுவாமி கோவிலில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.சனிக்கிழமையையொட்டி கிருஷ்ணகிரி, 5 ரோடு ரவுண்டானா பகுதி மற்றும் மார்க்கெட் சாலையோரம் பூக்கள் மற்றும் பூ மாலைகள் அதிகளவில் விற்பனையானது. * கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, 1,000க்கும் மேற்பட்டோர் காவேரிப்பட்டணம் அடுத்த, பெரியமலை தீர்த்தத்தில் புனித நீராடி, பெருமாள் சுவாமியை தரிசனம் செய்ய குவிந்தனர். ஒரு சிலர் விரதமிருந்து தீர்த்தத்தில் புனித நீராடிய பின், தங்களது வீட்டிற்கு சென்று, பெருமாளுக்கு படையலிட்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ