உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரிங்ரோட்டில் தேங்கிய மழைநீர் எம்.எல்.ஏ. ஆய்வு

ரிங்ரோட்டில் தேங்கிய மழைநீர் எம்.எல்.ஏ. ஆய்வு

ரிங்ரோட்டில் தேங்கிய மழைநீர்எம்.எல்.ஏ. ஆய்வுஓசூர், அக். 5-ஓசூர் பகுதியில் கடந்த, 2ல், 43.8 மி.மீ., மழையும், நேற்று முன்தினம், 10.10 மி.மீ., மழையும் பெய்தது. இதனால், ரிங்ரோட்டில் உள்ள தனியார் இருசக்கர வாகன ேஷாரூம் எதிரே சாலையில் மழைநீர் தேங்கியது. அப்பகுதியில் சாலையில் அபாய பள்ளம் உருவாகியுள்ள நிலையில், மழைநீர் தேங்கியதால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து விபத்தில் சிக்கினர். இதையறிந்த ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் நேரில் சென்று பார்வையிட்டு, உடனடியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி, சாலையில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறையினர் இரு பொக்லைன்களுடன் வந்து, தண்ணீர் தேங்காத வகையில் ஏற்பாடுகளை செய்தனர். அப்பணியை, எம்.எல்.ஏ., பிரகாஷ் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !