உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அங்கன்வாடி மையத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

அங்கன்வாடி மையத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

ஊத்தங்கரை :கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, மிட்டப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட காமராஜர் நகரில் இயங்கி வரும் அங்கன்வாடி மையம், சுகாதார சீர்கேட்டுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும், 30க்கும் மேற்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.மிட்டப்பள்ளி அங்கன்வாடி மையம் அருகில் தேங்கியுள்ள கழிவுநீர், கொசுக்களின் கூடாரமாக மாறியுள்ளது. இதனால் மலேரியா, டெங்கு போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீர் தேக்கத்தால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மையத்தை சுற்றி சுற்றுச்சுவர் இல்லாததால், குழந்தைகள் விளையாடும்போது, சாலைக்கு சென்று விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. கழிவுநீரை அகற்றி, சுற்றுச்சுவர் அமைக்க கோரி பலமுறை பொதுமக்கள் மனு அளித்தும், எந்தவித பயனும் இல்லை என, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி