உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்புடைய 2 பேருக்கு காப்பு

பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்புடைய 2 பேருக்கு காப்பு

போச்சம்பள்ளி,:கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை, முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பீமன், 35, திருவண்ணாமலை மாவட்டம், கட்டமடுவை அடுத்த, ராவந்தவாடியைச் சேர்ந்தவர் நந்தினி, 35, இருவரும் அடிக்கடி பல இடங்களில் கூட்டாக சேர்ந்து திருட்டு தொழில் செய்து வந்துள்ளனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் மத்தூர் பஸ் ஸ்டாண்டில் சந்தேகிக்கும்படி நின்று பேசிக்கொண்டிருந்தபோது மத்தூர் போலீசார் பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்ததை அடுத்து, தாங்கள் பல இடங்களில் திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்த ஒரு பவுன் நகையை பறிமுதல் செய்து, பீமன், நந்தினியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ