உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சாலைப்பணியாளர்கள் தீப்பந்தம் ஏந்தி தர்ணா

சாலைப்பணியாளர்கள் தீப்பந்தம் ஏந்தி தர்ணா

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தீப்பந்தம் கையிலேந்தி நேற்று மாலை நேர தர்ணா போராட்டம் நடந்தது. கோட்ட தலைவர் திம்மராஜ் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் தேவன், கோட்ட செயலாளர் ராஜமாணிக்கம், முன்னாள் மாநில துணைத் தலைவர் வெங்கடேசன், மாநில துணைத் தலைவர் தினேஷ், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் ஆகியோர் பேசினர். கோட்ட பொறியாளர் சுபாஷ் சந்திர போஸ் நன்றி கூறினார். போராட்டத்தில், சாலைப்பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். இது குறித்து நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் மேல்முறையீடு செய்யாமல், உயர்நீதிமன்ற ஆணையை அமல்படுத்த வேண்டும். கிருஷ்ணகிரி கோட்டத்தில் இருந்து தொலை துாரம் சென்று பணிபுரியும் சாலைப்பணியாளர்களுக்கு பயணப்படி வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைக்க வேண்டும். தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளை, தமிழக அரசே பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கையில் தீப்பந்தங்களை ஏந்தி கண்டன கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை