உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சாலைப்பணியாளர் சங்கம் போராட்டம்

சாலைப்பணியாளர் சங்கம் போராட்டம்

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை, ஒப்பாரி முழக்க போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் திம்மராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம், மாநில பொருளாளர் நந்தகுமார், மாவட்ட மகளிர் துணைக்குழு ஜெகதாம்பிகா, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சந்திரன் ஆகியோர் பேசினர்.ஒப்பாரி முழக்க போராட்டத்தில், சாலைப்பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். சாலைப்பணியாளர்களுக்கு பதவி உயர்வு சாலை ஆய்வாளர் நிலை 2 வழங்க வேண்டும். ஆபத்து படி மற்றும் சீருடை சலவை படி வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களின் உயிர் நீத்தவர்களின் குடும்பத்தில் கருணை நியமனம் வழங்கக்கேட்டு, விண்ணப்பம் செய்தவர்களுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை களைந்து, தனியார் மயப்படுத்துதலை கைவிட வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளை, தமிழக அரசே பராமரிக்க வேண்டும். கிராமப்புற இளைஞர்களுக்கு சாலை பணியாளர் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பாரி வைத்து, கோஷங்களை எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ