உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சாலையோரம் ஆண் சடலம் மீட்பு; கொலையா? போலீஸ் விசாரணை

சாலையோரம் ஆண் சடலம் மீட்பு; கொலையா? போலீஸ் விசாரணை

ஓசூர்: ஓசூர் அருகே, சாலையோரம் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றி, போலீசார் விசாரிக்கின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், பேரண்டப்பள்ளி வனப்பகுதியை-யொட்டி, 50 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடப்பதாக, மோரனப்பள்ளி வி.ஏ.ஓ., சர்புதீனுக்கு தகவல் கிடைத்தது. அவர் புகார் படி, ஹட்கோ போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். ஆனால், இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. அவர் சந்தன கலர் அரைக்கை சட்டை மற்றும் வெள்ளை வேஷ்டி அணிந்திருந்தார். அவரது சாவிற்கான காரணம் தெரியவில்லை. அவரது சடலம் சாலையோரம் குப்பையுடன் கிடந்ததால், அவரை கொலை செய்து, சடலத்தை சாலையோரம் வீசி சென்றார்களா என்ற சந்தேகம் போலீசாருக்கு உள்ளது. மேலும், அவர் பேரண்டப்பள்ளியிலுள்ள தரைமட்ட பாலத்தின் மீது அமர்ந்திருந்ததை சிலர் பார்த்துள்ளனர். அதனால் அவர், பாலத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாரா என்ற சந்தேகமும் போலீசாருக்கு உள்ளது. போலீசார், கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் அண்டை மாநிலமான கர்நாடகா மாநிலத்தில் மாயமான-வர்கள் விபரங்களை பெற்று விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ