உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆர்.டி.ஓ., ஆபீஸ் முற்றுகை

ஆர்.டி.ஓ., ஆபீஸ் முற்றுகை

கிருஷ்ணகிரி, டிச. 19-சோக்காடி, இட்டிக்கல் அகரம், ஆலப்பட்டியில், வீட்டுமனை பட்டா, 60 ஆண்டுக்கு மேலாக சாகுபடி செய்து வரும் நிலங்களுக்கு பட்டா, விதவைகளுக்கு ஓய்வூதியம், தொகுப்பு வீடுகள் புனரமைப்பு, சாலை வசதி மற்றும் ஆலப்பட்டியில் கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம், மயானத்திற்கான பாதை உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகள் மீது, மாவட்ட நிர்வாகம் கடந்த, 2 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து, மா.கம்யூ., கட்சி சார்பில், கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது. வட்ட செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான டில்லிபாபு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ