உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / துாய்மை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

துாய்மை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஓசூர், ஓசூர் மாநகராட்சி அலுவலக துாய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, இ.கம்யூ., மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மற்றும் அனைத்திந்திய தொழிற்சங்க மைய்ய கவுன்சில் ஆகியவை சார்பில், மாநகராட்சி அலுவலகம் முன் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஸ்டாலின் பாபு தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர் நலத்துறை அரசாணை எண், 62ன்படி, துாய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசு ஊதியம் வழங்க வேண்டும். வாரம் ஒருநாள் ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும்.பி.எப்., இ.எஸ்.ஐ., வசதிகளை செய்ய வேண்டும். ஒப்பந்ததாரரால் துாய்மை பணியாளர்கள் அநாகரீகமாக, தரக்குறைவாக, கீழ்த்தரமாக நடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி