உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு பள்ளியில் சரஸ்வதி சிலை; தி.க.,வினர் எதிர்ப்பால் அகற்றம்

அரசு பள்ளியில் சரஸ்வதி சிலை; தி.க.,வினர் எதிர்ப்பால் அகற்றம்

போச்சம்பள்ளி : மத்துார் அரசு பள்ளி வளாகத்தில் அமைத்திருந்த, சரஸ்வதி சுவாமி சிலை, தி.க.,வினர் எதிர்ப்பால் அகற்றப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் மத்துாரில், கிருஷ்ணகிரி சாலையிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சரஸ்வதி சுவாமியின் சிலை வைக்க கடந்த, இரு மாதங்களுக்கு முன், நடந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். குழு உறுப்பினர்கள் 24 பேரின் நன்கொடையில், பள்ளி வளாகத்தில் கடந்த, 15 நாட்களாக பீடம் அமைத்து, அதில் சரஸ்வதி சுவாமி சிலையை வைத்து, கட்டுமான பணி நடந்தது. இந்நிலையில், தி.க.,வை சேர்ந்த சிலர், பள்ளி தலைமை ஆசிரியர் பெருமாளிடம், 'பள்ளி வளாகம் பொதுவானது. அதில் ஹிந்து கடவுள் சரஸ்வதியின் சிலை வைப்பது நியாயமா' என கேள்வி எழுப்பி, எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் அவரை தொடர்பு கொண்ட, கிருஷ்ணகிரி மாவட்ட சி.இ.ஓ., முனிராஜ், எவ்வித அனுமதியுமின்றி சிலை வைப்பதை ஏற்க முடியாது எனக் கூறி சிலையை அகற்ற உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, பொக்லைன் கொண்டு சரஸ்வதி சிலை உடைத்து அகற்றப்பட்டது.இதுகுறித்து தலைமை ஆசிரியர் பெருமாளிடம் கேட்டதற்கு, ''பள்ளி மேலாண்மை குழு முடிவு செய்து, அவர்கள் சிலை அமைக்க கட்டுமான பணி செய்தனர். இது சம்மந்தமாக, தி.க.,வினர், அரசு பள்ளி பொதுவானது. இதில், சரஸ்வதி சுவாமி சிலை அமைக்கக்கூடாது என, எதிர்ப்பு தெரிவித்து, சி.இ.ஓ.,விடம் புகார் அளித்ததால், அவரது உத்தரவு படி சிலை அகற்றப்பட்டது,'' என்றார்.மாவட்ட சி.இ.ஓ., முனிராஜிடம் கேட்டதற்கு, ''பள்ளி வளாகத்தில் புதிய சிலைகள் அமைக்க அனுமதி இல்லை. மேலும், மத்துார் பள்ளி தலைமை ஆசிரியர் என்னிடம் எவ்வித அனுமதியும் பெறவில்லை. சிலையை இரவோடு இரவாக மேலாண்மை குழு உறுப்பினர்கள் வைத்துள்ளனர். தி.க.,வினருடைய புகார் எதுவும் தனக்கு வரவில்லை. மேலும், மதசார்புடைய சிலைகள் பள்ளி வளாகத்தில் வைக்கக்கூடாது என்பது விதி. அதனால் அதை அகற்ற உத்தரவிடப்பட்டது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 130 )

A.Kennedy
ஜூன் 18, 2025 14:11

ஸ்ரீரங்கத்தில் இவ்வளவு எதிப்பு இருந்தும் அங்கு ஒரு சிலை இருக்கிறதே? அதை எப்போது இடித்து தள்ள உத்தேசம்.


Palanisamy T
ஜூன் 12, 2025 07:13

திராவிடக் கழகத்தினரின் இந்த காட்டு மிராண்டித்தனமான செயல்கள் மற்றும் இவர்களது கொள்கைகள் வன்மையாக கண்டிக்கப் பட வேண்டியவை. இதிலெல்லாம் இவர்கள் தலையிட யார்? மற்றவர்களை மனத்தாலும் சீண்டிப் பார்க்கும் தைரியமற்றவர்கள் இவர்கள். வெறும் பாஜக ஆட்சி மட்டும் இங்கு நடந்தால் இப்படி சீண்டிப் பார்க்கும் தைரியம் வருமா? நாளை திமுக ஆட்சிக்கு இவர்களே முடிவுக் கட்டி விடுவார்கள் போல் தெரிகின்றது. தமிழகத்தில் மக்களை பிரித்து பிளவுப் படுத்தும் சாதியிக்கங்கள் போன்று இந்த இயக்கங்களுக்கெல்லாம் வெகு விரைவில் முடிவுக் கட்டவேண்டிய நாட்கள் வரவேண்டும். சரஸ்வதி தமிழ் வீணை வெள்ளைத் தாமரை மற்றும் நம் சமயங்கள் கலாச்சாரம் இவைகளெல்லாம் நம்மிடமிருந்து என்றும் பிரிக்க முடியாதவை. சரஸ்வதி தெய்வத்தை நாம் இன்று நேற்றல்ல தொன்மைக் காலம் தொட்டு வணங்குகின்றோம். அப்போ தெல்லாம் இவர்கள் எங்கிருந்தார்கள்? இன்று இவர்கள் அடையாளம் காட்டும் இன்றுள்ள மற்ற மதங்கள் அன்று இருந்தனவா? மக்கள் இனிமேல் இவர்களுக்கு முகம் கொடுக்கக் கூடாது. காலங்கள் வேண்டுமானால் நம்மை மாற்றலாம் . அறவு குறைந்தவர்கள் நம்மை மாற்ற நாம் அனுமதிக்கக் கூடாது.


Bala
ஜூன் 12, 2025 07:03

இதே ஒரு சிலுவை இருந்தால் மூடிக்கிட்டு இருந்துருப்பானுங்க


Sivasankaran Kannan
ஜூன் 11, 2025 13:59

இந்த பொறம்போக்குகள் மதரஸாக்களில், சர்ச்சுக்கள் நடத்தும் பள்ளிகளில் கான்வெண்ட்களில் சென்று ஒரு சின்ன தூசியையாவது தட்டுவார்களா? இந்த நாதாரிகளால் யாருக்கும் பயன் இல்லை. கடவுள் நமிபிக்கை மட்டுமே ஒரு மனிதனை நல்ல மனிதனாக வைத்திருக்கும்.. அறிவுள்ள எவனும் இந்த நாதாரிகளை மதிக்க மாட்டான்


நிக்கோல்தாம்சன்
ஜூன் 08, 2025 19:48

இதே திக காரர்கள் ,அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மதம் சார்ந்த விஷயங்கள் இருக்க கூடாது என்று முன்னெடுப்பார்களா?


Govind palani
மே 27, 2025 11:27

In Karnataka in all government colleges and schools saraswathy idols installed by government, their no body is objecting.


பா மாதவன்
மே 26, 2025 19:26

அதேபோல், நண்பர் சொல்லியது போல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மாற்று மதத்தை சேர்ந்த தெய்வ சிலைகளை அகற்ற போராடும் தைரியம் திகவினருக்கு உள்ளதா... அதை அகற்றும் தைரியம் தமிழக அரசுக்கு உள்ளதா என்பதை அரசு தான் தெளிவு படுத்த வேண்டும்... அதேபோல், எல்லா பள்ளிகளிலும் தேவையில்லாத அரசியல்வாதிகள் படங்கள் எல்லாவற்றையும் உடனடி அகற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப் படவேண்டும்..


பா மாதவன்
மே 26, 2025 19:20

தர்ம குணம், தர்ம சிந்தனை சனாதன தர்மத்தை சேர்ந்தவர்களிடம் அதிகம் உண்டு என்பதாலேயே ஒவ்வொரு கோவில் வாசலிலும் பிச்சைக்காரர்கள் இருப்பார்கள். அதனால் தான் என்னவோ, பெரிய பெரிய கோவில் வாசலில் பிச்சைக்காரன் போல் ஒரு சிலை வைத்துள்ளார்கள். அதை முதலில், அகற்ற முயற்சி செய்ய வேண்டும். அதே போல், எல்லா முக்கிய இடங்களுக்கும், பேருந்து நிலையங்களுக்கும் தங்கள் சொத்து , வாழ்க்கையை நாட்டிற்காக அர்ப்பணித்து, தியாகம் செய்த சுதந்திர போராட்ட தியாகிகள் பெயர் வைக்காமல் , குடும்பத்திற்காக சொத்துக்கள் பல சேர்த்த ஒரு சுயநலவாதி, ஒரு குறிப்பிட்ட கட்சி தலைவர் பெயரையே வைக்கின்றனர். டாஸ்மாக் கடைக்கு மட்டும் அந்த பெயர் வைக்க தயக்கம் என்னவோ.... ஒருவேளை தமிழகம் தள்ளாடாமல், தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதால்தான் என்னவோ..


Balakrishnan karuppannan
மே 25, 2025 09:08

திக காரன் யோக்கியன் மாதிரியே பேசுவான் அவன் யார் அரசு பள்ளிக்குள் சென்று போராட.... ஒவ்வொரு கோவிலின் முன்பும் ராமசாமி சிலை எதுக்கு... அரசு திட்டங்களுக்கு பெரியார் பேர் எதுக்கு... அரசு இடங்களில் பெரியாருக்கு சிலை எதுக்கு...


arumugam mathavan
மே 22, 2025 17:22

இந்த மண்ணின் கலாசாரத்தை அழிக்க நினைப்பவர்கள் , நிச்சயம் அழிந்து போவார்கள்


தமிழன்
ஜூன் 05, 2025 10:59

இதெல்லாம் எல்லாம் எங்க மண்ணின் கலாச்சாரம் இல்லை.. அகற்றப்படவேண்டியவை


சமீபத்திய செய்தி