உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்ட வணிக வளாகத்திற்கு மீண்டும் சீல்

நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்ட வணிக வளாகத்திற்கு மீண்டும் சீல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், 'மெட்ரோ பஜார்' வணிக வளாகம் இயங்கி வந்தது. இதை கண்ணன், குமுதம் என்பவர்கள் குத்தகை எடுத்தனர். அவர்கள், முதல் தளத்தில் விதிமுறைகளை மீறி, கடைகளை இடித்து வணிக வளாகமாக மாற்றியுள்ளதாக கூறி, கடந்த சில தினங்க-ளுக்கு முன் நகராட்சி அலுவலர்கள், 'சீல்' வைத்தனர்.கடந்த மாதம், 30ல், குத்தகை காலம் முடிந்த நிலையில் குத்தகை நிபந்தனைகளுக்கு முரணாகவும், நகராட்சி நிபந்தனைகளை மீறி-யதாலும் குத்தகை உரிமம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, வணிக வளாகத்தில் உள்ள பொருட்களை அகற்ற கால அவகாசம் வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு, 24 மணி நேர அவகாசம் வழங்கி, கடந்த, 4ல், வணிக வளாகத்தை திறந்தார். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி வணிக வளாகத்தில் பொருட்களை அகற்றாமலும், நகராட்சிக்கு கட்டடத்தை ஒப்ப-டைக்காமலும், அவர்கள் வணிக வளாகத்தில் வியாபாரத்தில் ஈடு-பட்டனர். இதையடுத்து நேற்று காலை, நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு தலைமையிலான நகராட்சி அலுவலர்கள் அங்கு சென்று, நீதிமன்ற உத்தரவையும் மீறி செயல்பட்ட வணிக வளா-கத்தை பூட்டி மீண்டும், 'சீல்' வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ