உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் அஞ்சல் அலுவலகத்தில் சர்வர் பாதிப்பு சேவைகளை பெற முடியாமல் மக்கள் தவிப்பு

ஓசூர் அஞ்சல் அலுவலகத்தில் சர்வர் பாதிப்பு சேவைகளை பெற முடியாமல் மக்கள் தவிப்பு

ஓசூர், ஓசூர் தபால் அலுவலகத்தில் சர்வர் வேலை செய்யாததால், சேவைகளை பெற முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். அதிகாரிகள் மக்களை திருப்பி அனுப்புகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் எம்.ஜி., ரோட்டில் தபால் அலுவலகம் இயங்குகிறது. தொழில் நகரம் என்பதால், பல்வேறு நிறுவனங்கள், தனிநபர்கள், அரசு சார்பில், தினமும் பல்வேறு ஆவணங்கள், தபால் மூலமாக பல்வேறு பகுதிகள் மற்றும் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. குறிப்பாக, பதிவு அஞ்சல்கள், விரைவு அஞ்சல்கள் அதிகளவில் அனுப்பப்படுகின்றன. சேமிப்பு கணக்கு, வைப்புத்தொகை திட்டங்கள், தங்க பத்திரம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுவதால், அங்கு, தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கடந்த ஒரு வாரமாக இங்கு, சர்வர் செயல்படுவதில்லை.அதனால், விரைவு அஞ்சல், பதிவு அஞ்சல் உட்பட பல்வேறு சேவைகளை பெற வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டி யுள்ளது. தொழில் நகரான ஓசூரில், தபால் சேவை கிடைக்காததால், முக்கிய ஆவணங்களை அனுப்ப முடியாமல் மக்கள் தடுமாறுகின்றனர். இது குறித்து, தபால் அலுவலக அதிகாரிகளிடம் கேட்டால், 'நாடு முழுவதும், சர்வர் பிரச்னை உள்ளது. அதனால் முக்கிய பணிகள் பாதிக்கப்படுகின்றன' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ