உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்

போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்

போச்சம்பள்ளி: 'டிட்வா' புயலால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக, 'ஆரஞ்சு அலர்ட்' அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் நேற்று போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு ஆடுகள், மாடு-களை விவசாயிகள் விற்பனைக்கு குறைந்தளவே கொண்டு வந்தி-ருந்தனர். அதேபோல் காய்கறிகள், மளிகை சாமான்கள் உள்-ளிட்ட பொருட்களை எடுத்து வரும் வியாபாரிகளும் குறைந்த அளவே வந்திருந்தனர். மேலும் அவற்றை வாங்க வியாபாரிகளும் மற்றும் சுற்று வட்டார கிராம மக்களும் மிக குறைவாகவே வந்திருந்தனர்.அதிகாலை முதலே போச்சம்பள்ளி சுற்று வட்டாரத்தில் மேக-மூட்டத்துடன் அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. இதனால் போச்சம்பள்ளி வாரச்சந்தை வெறிச்சோடி காணப்பட்-டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ