மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு இலவச கண்ணாடி
23-Jan-2025
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்-பள்ளியில், 2,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்-றனர். இவர்கள் எளிமையான முறையில் கல்வி கற்க வசதியாக, டைட்டன் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியில் இருந்து, 2 ஸ்மார்ட் போர்டு அமைக்கப்பட்டுள்ளது. இதை நேற்று பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் விழா நடந்-தது. மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் நர்மதாதேவி வரவேற்றார். மாநக-ராட்சி நகரமைப்பு குழு தலைவர் அசோகாரெட்டி முன்னிலை வகித்தார். டைட்டன் ஜூவல்லரி நிறுவன கோட்ட மேலாளர் பாலசுப்பிரமணியன், இரு ஸ்மார்ட் போர்டுகளையும் திறந்து வைத்தார். சமூக பொறுப்புணர்வு திட்ட மேலாளர் வைரவேல், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜசேகர், துணைத்த-லைவர்கள் கருணாநிதி, ஆனந்த்ரெட்டி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாக்கியலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
23-Jan-2025