மேலும் செய்திகள்
திறன் பயிற்சி பெற திருநங்கைகள் அழைப்பு
02-Jun-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமை, கலெக்டர் தினேஷ்குமார் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, 6 திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டுகளும், ஒருவருக்கு திருநங்கை அடையாள அட்டையும், 4 பேருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை, 6 பேருக்கு ஓய்வூதிய ஆணை, 4 பேருக்கு அரசிதழ் பெயர் திருத்தத்திற்கான ஆணை, ஒருவருக்கு உயர்கல்வி படிப்பதற்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் ஊக்கத்தொகை பெறுவதற்கான ஆணை ஆகியவற்றை கலெக்டர் தினேஷ்குமார் வழங்கினார். மாவட்ட சமூக நல அலுவலர் சக்தி சுபாசினி, இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் சரவணன், மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் பன்னீர்செல்வம், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
02-Jun-2025